ஜனாதிபதி செயலகத்தினால் நேரடியாக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் நாட்டில் நடாத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கமைய, எனது முயற்சி மற்றும் வேண்டுகோளுக்கிணங்க.. #project03
பாடசாலைகளின் வளங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடைபெற்று வரும் வேலை திட்டத்தின் அக்குறணை பிராந்தியத்துக்கான மூன்றாவது கட்ட வேலைத்திட்டம்,
அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலையில் 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பல்நோக்கு அரங்கம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இக்கட்டிடமானது பெரும்பாலான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் நிர்மாணிக்கப்பட உள்ளது. குறிப்பாக (Pavillion, Conference Room, Digital Room, Sub Office Room) காரியாலயம், எண்ணிலக்க அறை என்பவற்றை கூறலாம்.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்களான சுலைஹா, ஷியாம் மற்றும் அஷ்ரப் அவர்கள் உட்பட ஏனைய ஆசிரியர்கள், நிப்போன் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அல்ஹாஜ் நிஸாஹிர் அவர்கள், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் ஹஸன் அவர்கள் உட்பட அங்கத்தவர்கள், பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவர் பத்ரு ஸமான் உட்பட அங்கத்தவர்கள், பிரதேச வாசிகள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.